சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இன்றைய அமர்வில் கல்வி மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்பு தொடர்பான மூன்று முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு திருத்தங்களை முன்மொழிந்தனர். விவாதத்திற்கு பிறகு மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.