சென்னை: சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற எதிரணி முதலில் பேட்டிங் செய்து 178 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு களமிறங்கிய சென்னை அணி 18.2 ஓவர்களில் இலக்கை எட்டியது. தொடக்க வீரரின் அரைசதம் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது.







